SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கேக் வல்லுநர்கள் உருவாக்கிய உலகின் மிக நீளமான கேக் : வியக்கத்தக்க படங்கள்

706
20/01/2020

உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகம் கின்னஸ் ஆகும். ஓவியம், நடனம், விளையாட்டு, சாகசம் போன்ற பல்வேறு துறைகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீளமான கேக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.கேரளா பேக்கரிகள் சங்கம் சார்பில் திருச்சூர் நகரில் நடந்த விழாவில் இந்த கேக் செய்யப்பட்டது. சுமார் 1,500 பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சமையல்காரர்கள், 12,000 கிலோ சர்க்கரை மற்றும் மாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 4 மணிநேரம் செலவழித்து இதை தயாரித்தனர்.10 சென்டிமீட்டர் அகலமும், தடிமனும் கொண்ட இந்த வென்னிலா கேக், சுமார் 27,000 கிலோ எடை கொண்டது. இதுகுறித்து கேரளா பேக்கரி சங்கத்தின் செயலர் கூறுகையில், 6½ கிலோ மீட்டர் நீளமுடைய இந்த கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது. அதன் நீளத்தை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.இதற்கு முன்னதாக, சீனா நாட்டின் சிக்சி கவுண்டி பேக்கரி உரிமையாளர்கள் இணைந்து 3.2 கிலோ மீட்டர் நீளமுடைய பழ கேக்கை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்