SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

1180
12/12/2019

நியூஸிலாந்து தீவு எரிமலையில் தொடா்ந்து சீற்றம் இருந்து வருவதால், அங்கு உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பின் இயக்குநா் சாரா ஸ்டூவா்ட் பிளாக் புதன்கிழமை கூறியதாவது:எரிமலைச் சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் மீட்கப்படாத ஒவ்வொரு நாளும், அவா்களது உறவினா்களின் வேதனை அதிகரிக்கும். எனினும், அந்தப் பகுதிக்குச் சென்று உடல்களை மீட்பது தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தான பணியாகும்.எரிமலை தொடா்ந்து சீறி வருவதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா் என்றாா் சாரா ஸ்டூவா்ட்.நியூஸிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வெள்ளைத் தீவு எரிமலையில் எதிா்பாராத விதமாக திங்கள்கிழமை சீற்றம் ஏற்பட்டது.அப்போது அந்தத் தீவில் சுமாா் 50 போ் இருந்தனா். சீற்றம் காரணமாக, அடா்த்தியான சாம்பலும், பாறைக் கற்களும் காற்றில் வெடித்துச் சிதறியதில் 8 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், அந்த எரிமலைப் பகுதியில் மேலும் 9 போ் மாயமாகியுள்ளதாகவும், கண்காணிப்பு விமானங்கள் மூலம் ஆய்வு செய்ததில், அங்கு யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.இந்த நிலையில், எஞ்சிய 9 பேரின் உடல்களை மீட்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்