SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

689
11/12/2019

பிரேசில். : பிரேசில்...ஏராளமான விஷப் பாம்புகளின் வசிப்பிடம். பிரேசில் வெப்பத்தில் சுமார் 12 வகைக் கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் வாழ்கின்றனவாம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாம்புகளால் கடிபடுகின்றனர். பலர் மடிகின்றனர்.அமஸான் வட்டாரத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.ஆனால் அதை ஆக்ககரமாகப் பயன்படுத்த முடிவு செய்தனர் பிரேசில் ஆய்வாளர்கள்.நூற்றுக்கணக்கான பாம்புகளை வைத்து, அவற்றின் நஞ்சை எடுத்து, விஷக் கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர் இவர்கள்.அவை சுகாதார அமைச்சின் மூலம், பிரேசிலின் பல்வேறு மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.நஞ்சை எடுப்பது எளிதல்ல. மிகவும் ஆபத்தான அந்தச் செயலைக் கவனமாகக் கையாள்கின்றனர் ஆய்வாளர்கள். பத்திரமாகப் பாதுகாக்கப்படும் நஞ்சில் ஒரு சிறு துளி, குதிரை போன்ற விலங்குகளில் செலுத்தப்படுகிறது.அது குதிரையின் ரத்தத்தில் கலந்து எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்துகிறது.பின் அந்தக் குதிரையிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு,விஷக்கடிக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்