SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

726
05/12/2019

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையில் துவங்கிய பேரணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றனர்.மேலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களும் பேரணியில் பங்கேற்று ஊர்வலமாக வந்தனர்அண்ணா சாலையில் துவங்கிய பேரணியானது வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வது என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்த அமைதிப் பேரணியை முன்னிட்டு காமராஜர் சாலை, வாலாஜா சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வழித்தடத்தில் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்