SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்

516
21/10/2019

இத்தாலியை சேர்ந்த சிற்பி ஒருவர், ரோம் நகரிலுள்ள பட்டுப்போன மரங்களின் அடிபகுதியில் சிற்பங்களை வடித்து அசத்தி வருகிறார். ஐரோப்பா கண்டத்தில் உள்ள பசுமையான நகரங்களில் ஒன்றான ரோமில் 3 லட்சத்து 13 ஆயிரம் மரங்கள் பூங்காக்களிலும், தெருக்களிலும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 1920ம் ஆண்டுகளிலும், 1930ம் ஆண்டுகளிலும் நடப்பட்டவை ஆகும். இதனால் பல மரங்களுக்கு வயதாகிவிட்டன. மேலும் பல மரங்கள் பட்டுப்போய் காட்சியளிக்கின்றன. இதைக் கண்ட 22 வயதான சிற்பி காந்தினி, அந்த மரங்களுக்கு புதுவடிவம் கொடுத்து காட்சிப் பொருளாக அளிக்க விரும்பினார். இதையடுத்து பட்டுப் போன மரங்களின் அடிப்பகுதியை செதுக்கி சிற்பங்களாக வடித்து வருகிறார். ரோமிலுள்ள வில்லா பாம்பிலி பூங்காவில் உள்ள மரத்தின் அடிப்பகுதியில் அந்நகரின் அடையாள சின்னமாக கருதப்படும் ஷி-வொல்ப் ((she-wolf)) எனப்படும் ஓநாய் முகப் பெண் சிற்பத்தை வடித்தார். இந்த சிற்பம், அவரது கை வண்ணத்தில் உருவான 66ஆவது சிற்பம் ஆகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்