SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் !! : புகைப்படத்தொகுப்பு

739
21/10/2019

ஸ்பெயின் நாட்டில் வருடாந்திர செம்மறி ஆடுகளின் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினின் வடக்குப்பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளுடன் விவசாயிகள் இடம்பெயர்ந்தனர். அதனை நினைவுபடுத்தும் விதமாக, அதே வழித்தடத்தில் பாரம்பரிய முறைப்படி செம்மறி ஆடுகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பெயரளவிற்காக ஆயிரம் ஆடுகளுக்கு 50 மரவெதிஸ் நாணயங்கள் மட்டும் கட்டணமாக அவர்களிடம் வாங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஆயிரம் செம்மறி ஆடுகளும், 100 ஆடுகளும் மந்தையில் இடம்பெற்றன. ஆடுகளை தலைநகர் மேட்ரிட்டின் பிரபலமான முக்கிய வீதிகள் வழியே மேய்ப்பவர்கள் அழைத்துச் சென்றதை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்