SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

444
23/09/2019

காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேனுக்கு வயது 80 ஆகி விட்டது. இதனைக் கொண்டாட நேற்றிரவு 8 மணிக்கு உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் பேட்மேன் சிக்னல் ஒளி வீசியது.அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனியின் பெர்லின், பிரிட்டன் தலைநகர் லண்டன், ஸ்பெயின் நகரான பார்சிலோனா, பிரேசிலின் சாவ் பாலோ, கனடாவின் மான்ட்ரீல், அமெரிக்காவின் நியுயார்க் உள்ளிட்ட நகரங்களின் பிரசித்தி பெற்ற கட்டடங்கள் , சாலைகள், சிக்னல்கள், மொபைல்கள், டி.சர்ட்டுகள் என பல்வேறு இடங்களில் பேட்மேன் பளிச்சிட்டார்.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட ஏராளமான ரசிகர்கள் பேட்மேன் வேடம் அணிந்து வீதிகளில் கொண்டாடினர். பலர் செல்போன்களில் பேட்மேனுடன் படம் எடுத்துக் கொண்டனர்.பேட்மேன் வேடம் அணிந்தவர்களுக்கான ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது. இதில் செல்லப்பிராணிகளான நாய்களும் பேட்மேன் வேடத்தில் கலந்துக் கொண்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்