SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

340
23/09/2019

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் தீ, இந்தோனேஷியா காட்டுத்தீ போன்ற பல்வேறு நிகழ்வுகளால், புவி வெப்பமயமாகி, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்து, முக்கிய முடிவுகளை எடுக்க ஐ.நா பொதுச்சபை கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதற்காக 150க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள், விழிப்புணர்வு பேரணிகளை நேற்று நடத்தினர்.குறிப்பாக மெக்ஸிக்கோ, இந்தியா, பெரு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற தலைவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்கள் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஆஸ்திரேலியா, இந்தியா, ஆர்மேனியா, பிரிட்டன், கென்யா, செனகல் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூமியைப் பாதுகாக்கவும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான சுற்றுப்புற கேடுகளைத் தடுக்கவும் கோரி பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏறத்தாழ 300,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்