SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

1595
18/09/2019

பிரான்சில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதந்து செல்லும் வாகனம் வடிவமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.நீரைக் கிழித்துக் கொண்டு தரையில் கார் ஓடுவதைப் போல் மேற்பரப்பில் மிதந்தபடி மின்சாரத்தால் இயங்கும் அந்த வாகனம் பயணித்தது.த ஸீ பப்பிள்ஸ் (The Sea bubbles) என்ற நிறுவனம் ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஃபிளையிங் டேக்ஸி எனும் சேவையை செய்னே (Seine) நதியில் இயக்கத் திட்டமிட்டு பிரத்யேக வாகனத்தை தயாரித்துள்ளது. கிழக்கு-மேற்காக மணிக்கு 20 மைல் வேகத்தில் பயணிக்கக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால், அதிகபட்சம் நீர் பயணத்துக்கான 18 மைல் என்ற வேக விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படும் என பப்பிள்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பரிசோதனை முயற்சியை பாரிசில் போலீசார் தடுத்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் இதை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.பாரிஸ் ஒரு அருங்காட்சியகம் என்றும், யாருமே பயன்படுத்தாத ஒரு நதியில் பயனுள்ள வகையில் போக்குவரத்தை மேம்படுத்தக் கூட உடனடியாக அனுமதி வழங்குதில்லை என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்