SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

926
16/09/2019

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.சுமார் 3,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதோடு, தற்காலிகமாக அங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் சாலையோரத்தில் குப்பை போல குவிந்து கிடக்கின்றன. 100க்கும் அதிகமான கார்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி சாலையோரத்தில் கிடக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HalloweenDogParade

    நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!

  • DallasTornado2210

    டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

  • PacificPalisadesFire

    லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

  • BeloHorizontePlaneCrash

    பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி

  • NaruhitoEnthronement

    ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்