SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

724
19/08/2019

அமைதி திரும்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பேரணி நடத்தியதால் ஹாங்காங் குலுங்கியது. ஹாங்காங்கில் குற்றவழக்கில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கியதால், அதுதொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஹாங்காங் தலைவர் கேரி லேமுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஆங்காங்கு கலவரமும் வெடித்து வருவதால், ஹாங்காங்கில் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போராடும் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஹாங்காங்கில் இயல்பு நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என கோரியும் சுமார் 5 லட்சம் பேர், அங்குள்ள தாமார் பூங்காவில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி திரண்டனர். இதேபோல, ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை நிறுத்தக்கோரி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்