SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

1220
30/11/2022

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி காலை நடைப்பயிற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள தங்கும் இடத்தில் இருந்து நாள்தோறும் கடற்கரை சாலையில் லட்சுமி யானை நடைப்பயிற்சி மேற்கொள்ளும். காலையும் வழக்கம் போல பாகன் சக்திவேலுடன் நடைப்பயிற்சிக்கு புறப்பட்ட யானை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. லட்சுமி இறந்த துக்கம் தாளாமல் மக்கள் கதறி அழுகின்றனர். கிரேன் மூலம் யானையின் உடல் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்