SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

476
23/09/2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தனர். தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆட்டோக்களும், பேருந்துகளும் வெகு சில இடங்களில் மட்டுமே இயக்கப்பட்டன. கோழிக்கோட்டில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்கினர். கோட்டயத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். கொச்சியில் முக்கிய சாலையில் திரண்ட அந்த அமைப்பினர் என்.ஐ.ஏ. சோதனைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்