SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

439
29/06/2022

மிசவுரி: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிகாகோ நோக்கி, 8 பெட்டிகள் கொண்ட ஆம்டிரக் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 243 பயணிகள் மற்றும் 12 ரெயில்வே ஊழியர்கள் இருந்தனர். மிசவுரி நகரில் உள்ள மென்டன் என்ற பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஒரு லாரி, ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்பகுதியில், அபாய எச்சரிக்கை அம்சங்கள் எதுவும் இல்லை. அதனால் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதியது.இதில் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் ரயிலில் இருந்த 2 பேர் மற்றும் லாரியில் இருந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nepal_snowfall

    நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

  • italy-first-female

    இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

  • shooting-russia-school-26

    ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்