SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

890
04/08/2021

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டு வரும் நிலையில் பேரணி நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர். இதேபோல் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜோ சைக்கிள் பேரணியில் ஈடுபட்டார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவும் பேரணியில் பங்கேற்றார். சைக்கிள் ஓட்ட இயலாத எம்.பி.க்கள், நாடாளுமன்றத்துக்கு நடந்து சென்றனர். எரிபொருள் விலையை திரும்பபெறக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்