SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

1539
22/07/2021

அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.இந்த பயணத்தில் ஜெப் பெசாஸ் உடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 50, முன்னாள் விமான போக்குவரத்து துறை அதிகாரியான, 82 வயது மூதாட்டி வேலி பங்க், 18 வயது இளைஞரான ஆலிவர் டேமன் ஆகியோர் உடன் சென்றனர்.மேற்கு டெக்சாசில் இருந்து புறப்பட்ட 'புளூ ஆரிஜின்' ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்து, 106 கி.மீ., மீட்டர் உயரம் சென்றது.இது, கடந்த வாரம் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ரிச்சர்டு பிரான்சன் சென்ற உயரத்தை விட, 16 கி.மீ., கூடுதலான துாரம்.புவி ஈர்ப்பு பாதையை கடந்ததும் ராக்கெட்டில் இணைக்கப்பட்டு இருந்த பயணியர் அமர்ந்திருந்த 'கேப்ஸ்யூல்' எனப்படும் உருண்டை வடிவிலான பகுதி தனியே பிரிந்தது.அப்போது மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு விண்வெளியில் உடல் எடையற்ற தன்மையை பயணியர் உணர்ந்தனர். பின், ராக்கெட் முதலில் தனியாக தரை இறங்கியது.அதன் பின் பூமியை நோக்கி வந்த கேப்ஸ்யூலில் இருந்து 'பாராசூட்'கள் விரிந்து பத்திரமாக பாலைவனத்தில் தரை இறங்கியது. இந்த மொத்த பயணமுமே, 10 நிமிடங்களில் முடிவடைந்தன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

  • train-luxury-13

    இந்தியாவின் 5 பிரம்மாண்ட சொகுசு ரயில்கள்!: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் வசதிகள்..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்