SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

1368
22/04/2021

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் உயிரிழந்தனர். நாசிக்கில் உள்ள ஜாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்