SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

1087
21/04/2021

பூமியில், நமக்கு விளங்காத மர்மங்களை கொண்டிருக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் டானாகில் டிப்ரஷன்என்ற இடம். இது வட ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா என்ற நாட்டில் அமைந்துள்ளது. இங்கு பல சூடான நீரூற்றுகள் உள்ளன, எரிமலைகளும் உள்ளன. அதோடு மட்டுமல்ல இங்கு நெருப்பு மழையும் பெய்யுமாம். டானாகில் டிப்ரஷன் என்ற இடத்தில் அதிக அளவு பொட்டாசியம் உப்பு மற்றும் கந்தகத்தை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள நிலம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறமாக மாறியுள்ளது. அதோடு மட்டுமல்ல, இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், டானாகில் டிப்ரஷன் கடல் மட்டத்திலிருந்து 125 மீட்டர் கீழே அமைந்துள்ளது. இந்த இடத்தில் மூன்று டெக்டோனிக் ப்ளேட்டுகள் உள்ளன. டெக்டோனிக் இயக்கம் காரணமாக, இந்த தட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 1 அல்லது 2 சென்டிமீட்டர் தொலைவில் நகர்கின்றன. தட்டுகள் விலகுவதால் இங்கு விரிசல் வருகிறது. இதன் காரணமாக, பூமியின் உள்ளே இருந்து சூடான எரிமலை வெடிக்கிறது. சிறிது நேரம் கழித்து ஆழமான பள்ளம் தோன்றி, அதில் கடல் நீரை முழுமையாக நிரம்பி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்