SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

398
05/03/2021

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பிட்லிஸ் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. அதில் லெப்டினன்ட் ஜெனரல் ஓஸ்மான் எர்பாஸ் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 9 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்