SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்: சிங்கமுகாசூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப்பெருமான்..!!

388
20/11/2020

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. யானை முகம் தாரகாசூரனை வதம் செய்தார் ஜெயந்திநாதர். சிங்கமுகாசூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப்பெருமான். சூரனுக்கும் ஜெயந்திநாதருக்கும் இடையே போர் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து இன்று கோயில் அருகே கடற்கரை முகப்பு பகுதியிலேயே நடத்தப்பட்டது. முதலில் சிங்கமுகனையும் அடுத்தது தாரகாசுரனையும், இறுதியாக சூரபத்மனையும் முருகப்பெருமான் வதம் செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்