SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

370
28/10/2020

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்கின்றனர். இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்