SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் விஜயதசமி உற்சாக கொண்டாட்டம்!: நெல், பச்சரிசியைக் கொண்டு 'அ' எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்..!!

414
27/10/2020

தமிழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு செயலுக்கும் வெற்றி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். இதையொட்டி தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ள பெற்றோர், கோயிலுக்கு அழைத்து வந்து நாக்கில் எழுத்துகளை எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசி, நெல் போன்ற தானியங்களில் எழுத வைத்தும் கற்றுக் கொடுப்பது வழக்கமாகும். அதன்படி பல்வேறு கோயில்களிலும் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தைகளின் நாக்கில் தங்கத்தால் அ, அம்மா என எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதாயே என எழுதியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

  • vilaaaa_neeemm

    அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்