SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

1425
22/10/2020

தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் அறுவை சிகிச்சைக்கு பின் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர். பாகிஸ்தானை சொந்த நாடாக கொண்ட சஃபா மற்றும் மார்வா பீபீ ஆகிய இரட்டை சகோதரிகள் பிறக்கும்போதே தலை ஒட்டி பிறந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் சிகிச்சைக்காக இங்கிலாந்து தலைநகர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரிக்கப்பட்டனர். தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு லண்டன் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தீர்வு கண்டனர். இந்நிலையில், அந்த குழந்தைகள் இருவரும் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்