SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

501
22/10/2020

மின்சார ரயிலில் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று பெண்கள் உற்சாகமாக பயணித்தனர். மும்பையில் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், தூதரக அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பெண்களுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. கூட்ட நெரிசல் இல்லாத நேரமான காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரெயில் சேவை வரையிலும் பெண்கள் பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரயில்களில் அனைத்து பெண் பயணிகளும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 7 மாதத்திற்கு பிறகு மின்சார ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் உற்சாகம் அடைந்தனர். இதற்கிடையே பெண் பயணிகளின் வசதியாக மேற்கு ரயில்வேயில் 4 மகளிர் சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்