SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

488
22/10/2020

வியட்நாமில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் உயிரிழந்தனர். வியட்நாம் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் வீடுகள், சாலைகளை சூழ்ந்துள்ளது. சாலைகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக 1 லட்சத்து 78 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 7 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வியட்நாமில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு போன்ற பேரிடர் காரணமாக இதுவரை 27 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்