SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் விசா பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்!: ஆப்கானிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி..!!

666
21/10/2020

ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 ஆப்கானிஸ்தானியர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 8 பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தில் நின்று இருந்த பல வயதானவர்களும் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்