SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

469
21/10/2020

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு லேடி பாஸ் என்று ஆதரவாளர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. மழை பெய்த நிலையிலும் அசராத கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக்கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்துள்ளார். அச்சமயத்தில் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த கூடிய வகையில் குடையைப் பிடித்தபடி மழையில் நடனமாடினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்