SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

374
20/10/2020

சென்னையில் காலை முதலே பலத்த மழையால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. வளி மண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஈரோடு, புதுக்கோட்டை,கரூர் திருச்சி, திருப்பூர் திண்டுக்கல்,பெரம்பலூர் அரியலூர்,நாமக்கல் கள்ளக்குறிச்சி, கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் பிரதான பகுதிகளில் காலை முதலே வானம் இருள்சூழ்ந்து காணப்பட்டது. பிறகு சற்று நேரத்தில் இடியுடன் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளம் வழிந்தோடியது. அண்ணாசாலை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு நந்தனம், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளிலும பலத்த மழை பெய்துள்ளது. தற்போது வரை குளிர்ந்த சீதோஷ்ண நிலையை நிலவுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்