SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

1056
15/10/2020

தெலுங்கானாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி நதியின் கிழக்கு பகுதியில் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் மிதக்கின்றன. ஒரு பழைய கட்டிடமும் இரண்டு கூரைகளும் இடிந்து விழுந்தன. இதேபோல் ஹைதராபாத்தில் பழைய கட்டடம் ஒன்றும் ஹரிபவுலி பகுதியில் இடிந்து விழுந்தது. கார்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டன. ஹைதராபாத்தில் வீடுகளுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது. ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தால் 15 பேர் உயிரிழந்த நிலையில், தெலுங்கானாவில் இதுவரை 32 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்