SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அரிய விண்வெளி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு: புகைப்படங்கள்

454
12/10/2020

எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அரிய விண்வெளி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. நிலவில் இருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட 320 கோடி ஆண்டுகள் பழமையான விண்கல் வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்போ 2020 வளாகத்தில் முதலாவதாக விண்வெளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக கண்காட்சியின் முகப்பில் உள்ள அல் வாசல் டோம் எனப்படும் கோள வடிவ அரங்கத்தில் இந்த காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த கோள வடிவ அரங்கத்தின் உள்ளே 360 டிகிரியில் அச்சு அசலான விண்வெளி தோற்றத்தை காட்சிகளாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேக புரோஜெக்டர் உதவியின் மூலம் கோள அரங்கில் விண்வெளி காட்சிகள் திரையிடப்பட உள்ளது. வருகிற 2021ம் ஆண்டு அக். மாதம் தொடங்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் முதல் வாரத்தில் இந்த காட்சிகள் ஒளிபரப்பப்படும். தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கடிகாரத்தை பொதுமக்கள் பார்வையிட அரங்கில் வைக்கப்பட உள்ளது. இந்த கடிகாரம் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி செயல்பாடுகளுக்கு மிகத்துல்லியமான நேரத்தை கணக்கிட்டு தருவதற்கு பயன்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்