SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு!: மெக்காவிற்கு "உம்ரா" புனித யாத்திரையைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்..!!

591
05/10/2020

சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனிதத் தலமான மக்காவிற்கு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் "உம்ரா" புனித யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். கிருமிப் பரவலை முன்னிட்டு அதிகாரிகள் கடந்த 7 மாதங்களாக அதற்கு அனுமதி வழங்கவில்லை. கடுமையான சுகாதார விதிகளைப் பின்பற்றி மீண்டும் காபாவை வலம் வர முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக அன்றாடம் 6,000 யாத்ரீகர்கள் சிறு சிறு குழுக்களாக அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு யாத்ரீகர் குழு உள்ளே செல்லும் முன்பும், அவர்கள் வெளியே வந்த பிறகும் பள்ளிவாசலில் கிருமிநீக்கப் பணிகள் இடம்பெறும். இரண்டாம் கட்டமாக இம்மாதம் 18ம் தேதியிலிருந்து நாள்தோறும் 15,000 யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர் மூன்றாம் கட்டமாக, அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து வெளிநாட்டு யாத்ரீகர்களும் அனுமதிக்கப்படுவர். அப்போது தினமும் 20,000 யாத்ரீகர்கள் வரை "உம்ரா" புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி உண்டு.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

  • arjennn11

    திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

  • russia-naval-26

    ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்!: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்