SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!: 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது..புகைப்படங்கள்..!!

973
30/09/2020

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது. ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இன்று காலை 10:30 மணியளவில் இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. டிஆர்டிஓவின் பிஜே-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணையில் உள்ள ஏர் பிரேம் மற்றும் பூஸ்டர் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும். இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிஆர்டிஓ தலைவர் சதீஷ்ரெட்டி, இந்த ஏவுகணையில், வருங்காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சேர்ப்பதற்கு இன்று நடந்த சோதனை உதவும் எனக்கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்