SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

7987
29/06/2020

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று காலை நான்கு பேர் தங்கள் வாகனத்திலிருந்து வெளியே வந்து கையெறி குண்டுகளை வீசி உள்ளனர். இந்த குண்டுகள் வெடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கும் வந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு காவலர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.சிந்து முதலமைச்சர் முராத் அலி ஷா, இந்த தாக்குதல் "தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் மீதான தாக்குதலுக்கு ஒத்ததாகும்" என்று கூறி உள்ளார்.சிந்து ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் கண்டித்து, "நாங்கள் சிந்தை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்போம்" என்று கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்