SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடுமையிலும் கொடுமை...!! : அசாமில் கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; 18 பேர் பலி; 9 லட்சம் பேர் பாதிப்பு

510
29/06/2020

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையே, அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை18 ஆக அதிகரித்துள்ளது.அங்குள்ள 23 மாவட்டங்களில் உள்ள 9.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 2 பேர் பலியாகினர். இதையடுத்து, மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்