SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2000 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை மீண்டும் பரிசோதனை: அந்நாட்டு அதிபர் நேரில் ஆய்வு

1795
10/01/2020

ரஷ்யாவால் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனையை அந்நாட்டு அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார். கின்ஜால் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணையை, உலகின் எந்த சக்தியாலும் இடைமறித்து அழிக்க முடியாது என புதின் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் கருங்கடல், வடக்கு கடற்படைகள் கருங்கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. அப்போது கலிப் கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் வான்வழி ஏவுகணை கின்ஜால் ஆகியவற்றை ஏவி பயிற்சயில் ஈடுபட்டன. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் அந்த ஏவுகணை, மிக் 31 கே ஹெலிகாப்டரில் இருந்து ஏவி மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 40 விமானங்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை இந்தப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்த சோதனையை கடற்படை கப்பலில் இருந்தபடி ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார். இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட பின்னர் விண்வெளியில் மேல் நோக்கி சீறி பறக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

  • korona-death19

    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

  • tn-school19

    தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

  • jesee_chrrr1

    3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்