SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி.மலை தீபத்திருவிழா 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் பவனி

574
09/12/2019

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாளான இன்று காலை சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம் தேதி முதல் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் 9ம் நாளான இன்று காலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்து திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்