SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8100 கி.மீ. தொலைவுக்கு ரஷ்யா - சீனா இடையே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வினியோக திட்டம் தொடக்கம்

729
03/12/2019

ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் 8100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு இரு நாடுகள் இடையே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 38000 கன மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு 2024 ஆம் ஆண்டு வரை வினியோகம் செய்யப்பட இருக்கிறது.ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் இதனை செயல்படுத்துகிறது. காணொலி முறையில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவில் சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.எரிசக்தி துறையில் இருநாடுளுக்கு இடையிலான உறவு இனி புதிய உயரத்திற்கு செல்லும் என்று அப்போது பேசிய புதின் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் விதத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்வதை கைவிட்டு, இயற்கை எரிவாயுவுக்கு சீனா மாறி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

  • monkey_thaayklannn1

    குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

  • eelephanttt11

    35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

  • muskes_ambani11

    27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

  • delhi_farmnmmmeee

    திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்