SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்

239
03/12/2019

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரான ப்ரியங்கா ரெட்டியை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில், லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலையில் நீதி வேண்டும் என கோரி கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ப்ரியங்கா ரெட்டி கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தினர்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர்கள், ப்ரியங்கா ரெட்டியின் உருவப் படம் உள்ளிட்ட பதாகைகளுடன் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹைதாராபாத் ஒஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலைகாரர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தினர். ப்ரியங்கா ரெட்டியின் கொலையைக் கண்டித்து ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் ஏ.ஐ.டி.எஸ்.ஓ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குமாறு முழக்கம் எழுப்பினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

  • monkey_thaayklannn1

    குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

  • eelephanttt11

    35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

  • muskes_ambani11

    27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

  • delhi_farmnmmmeee

    திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்