SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கோ குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

922
25/11/2019

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் கிழக்கு நகரமான கொமாவில் இருந்து busy bee என்ற நிறுவனத்தின் 19 இருக்கைகள் கொண்ட டர்னியர் ரக விமானம் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் பகுதி பழுதானதால், விமானி விமான நிலையத்திற்கு திரும்பிச் செல்ல முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த விமானம் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 17 பயணிகள் 2 ஊழியர்கள் மற்றும் விமானம் விழுந்த குடியிருப்புகளில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்