SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலியில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

903
18/11/2019

இத்தாலின் நாட்டின் வெனிஸ் நகரில், ஒரே வாரத்தில், மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. வரலாறு காணாத அளவில், அடுத்தடுத்து கடல் நீர் வெள்ளமென உட்புகுவதால், அவசரநிலை பிரகடனம் தொடர்கிறது. தண்ணீரில் மிதக்கும் சொர்க்கம் என்றழைக்கப்படும் வெனிஸ் நகருக்குள், கடலில் அலைகள் உயரும்போது, குதிகால் அளவிற்கு, நீர் பெருக்கெடுப்பது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால், கடந்த ஒரு வாரமாக, பலத்த காற்றுடன், அதி உயரத்திற்கு கடல் அலைகள் எழுவதால், வெனிஸ் நகரின், புனித மார்க்ஸ் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில், 5 அடி உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான வெனிஸின் 70 விழுக்காடு இடங்கள் கடல்நீரால் சூழப்பட்டிருக்கின்றன. பழமையான கட்டிடங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட புராதன கட்டங்களை, கடல்நீர் சூழ்ந்திருப்பதால், கலை பொக்கிஷங்கள் சேதமடைந்துள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்