SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுனெஸ்கோவின் சர்வதேச பாரம்பரிய சின்னமான ஷூரி அரண்மனையில் தீவிபத்து: பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாயின

1083
31/10/2019

சர்வதேச பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஜப்பானின் ஷூரி அரண்மனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாயின. ஒகினாவா தீவின் தலைநகரான நஹாவில் அமைந்துள்ளது ஷூரி அரண்மனை. மரத்தால் கட்டமைக்கப்பட்ட அந்த அரண்மனையில் இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த 10 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டன. இருப்பினும் அரண்மனையின் 4,200 சதுர மீட்டர் பரப்பிலான பகுதிகள் நாசமாகின. இரண்டாம் உலகப் போரில் முற்றிலும் சிதைந்த ஷூரி அரண்மனை, 1990ம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

  • republic20222

    டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்