SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் மேம்பாலம் இடிந்து சாலையில் சென்ற கார்களின் மீது விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

1475
11/10/2019

சீனாவில் மேம்பாலம் இடிந்து சாலையில் சென்ற கார்களின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வுக்சி நகரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டப்பட்ட இந்த மேம்பாலம் மற்றும் அவ்வழி சாலையை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு இரு வழிகளிலும் வாகனங்கள் சென்றபோது, திடீரென மேம்பாலம் உடைந்து சாலையில் சென்ற 2 கார்கள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது. திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்ததில், மேம்பாலத்தில் சென்ற 3 கார்கள் மற்றும் இரு லாரிகளும் கீழே விழுந்தன. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிரேன் உள்ளிட்டவற்றின் உதவியுடன் விடிய விடிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், லாரி ஒன்று அனுமதிக்கப்பட்டதை விட அதிக லோடு ஏற்றி சென்றதால், மேம்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்