SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் பண்டைய காலத்திலேயே செயல்பட்ட சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம்: அகழாய்வின் போது நிரூபணம்

961
11/10/2019

எகிப்து நாட்டில் உள்ள லக்சார் பகுதியில் நடைபெற்றுவரும் அகழாய்வில், பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் முதன் முறையாக கிடைத்துள்ளன. தொல்பொருள் ஆய்வாளரான ஜாஹி ஹவாஸ் தலைமையிலான குழு ஒன்று, எகிப்தில் உள்ள லக்சார் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் அங்குள்ள மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் பண்டைய காலத்தைச் சேர்ந்த பல்வேறு அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விதவிதமான மண்பானைகள், அடுப்பு, தண்ணீர் தொட்டி, மூன்றாம் அமென்ஹொடாப் மன்னருக்கு சொந்தமானதாக கருதப்படும் வளையம், இறக்கைகள் கொண்ட ஹோரஸ் எனும் கடவுளின் சிலை, அரச சவப்பெட்டிகளை அலங்கரிக்கப் பயன்படுத்தும் தங்கத்தால் ஆன மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு லக்சார் பகுதியில் கல்லறையும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு லக்சார் பகுதியில், பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைப்பது இதுவே முதன் முறை எனவும் கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்