SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாள்: மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் வீதிஉலா

1299
04/10/2019

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி மலையப்ப சுவாமி பல்வேறு அவதாரங்களில் மாடவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை மலையப்ப சாமி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரங்கள் அனிந்து மோகினி அவதாரத்தில் பல்லக்கில் மாடவீதிகளில் உலா வந்தார். இந்த நிகழ்வுகளின் போது பக்தர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், கோலட்டம், நடைபெற்றது. லட்சக்கணக்காண பக்தர்கள் நான்கு மாடவீதியில் திரண்டிருந்து கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, பிரம்மோற்சவ நாள்களில், மாடவீதியில் வலம் வரும் எம்பெருமானின் களைப்பைப் போக்க நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் பால், தயிர், இளநீர், தேன், பழச்சாறு, மஞ்சள், சந்தனம், செஞ்சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்