SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் : 48 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

358
18/09/2019

ஆப்கானிஸ்தானில் இரு வேறு இடங்களில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர்.80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் அதிபர் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் அஷரப் கானி, பார்வான் பிராந்தியத்தில் உள்ள சாரிகார் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார்.இதற்காக அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர், தனது உடலில் கட்டி இருந்து குண்டுகளை வெடிக்க வைத்த தில், 26 பேர் உயிரிழந்தனர்.42 பேர் படுகாயம் அடைந்தனர். இதே போன்று காபூல் நகரில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்