SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலம்பியா நாட்டில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து : 7 பேர் பலி

306
17/09/2019

கொலம்பியா நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். அந் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று, லொப்ஸ் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், விமானம் விழுந்த வீட்டில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • planet Vaikundam

    ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

  • 04-12-2021

    04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • lunch-ofz

    லஞ்ச் டைம் ஆச்சா...இதோ வந்துட்டோம்: வேலை சுமையில் ஓடுபவர்களுக்கு அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து அசத்தும் ஒரே குடும்பத்தினர்..!!

  • Ministers

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

  • Ohmicron_Rajiv Gandhi_Bed

    ஓமைக்ரான் எதிரொலி; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் 150 படுக்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்