SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய கேரளா: தனித் தீவுகள் போன்று காட்சியளிக்கும் பகுதிகள் ; துயரத்தில் மக்கள்

903
09/08/2019

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலமே திக்குமுக்காடுகிறது.கேரள மாநிலத்தை சென்ற வருடத்தைப் போலவே மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு, மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன. கொச்சி விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும். அங்கு செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மின் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளன.கனமழை கொட்டி வருவதை அடுத்து வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 40 பேர் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.கேரள மாநிலம் சென்ற வருடம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால்பாதிக்கப் பட்ட நிலையில், மீண்டும் கேரளாவை மழை வெள்ளம் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்