சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்
6753
02/11/2017
பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியுடன் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சக இந்திய வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை தந்தனர். மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கைகளைத் தட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். இந்திய அணிக்காக அதிக முறை கடைசி ஓவரை வீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன் என்று வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறினார்.