SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்

12/3/2020 3:58:02 AM

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் “தமிழகம் மீட்போம்” 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்  நேற்று நடந்தது. இதில், காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகள் 260 பேருக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னதாக, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., கடந்த கால திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தார்.  இந்த கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், கோவிந்தசாமி, கோவிந்தன், கோவிந்தராசு, சாமிநாதன், சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, பாபு, ரஜினிசெல்வம், டாக்டர் மாலதி, நாராயணமூர்த்தி, சுப்பிரமணி, அஸ்லம், ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், ஓசூரில் தமிழகம் மீட்போம் காணொலி பொதுகூட்டம் வாயிலாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் பேசினர். மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பேரவை துணைச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வீராரெட்டி, சுகுமாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, முனிராமையா, சாந்தி மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அணிகளின் அமைப்பாளர்கள் இலக்கிய அணி எல்லோர மணி, மாணவர் அணி ராஜா இளைஞர் அணி சுமன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், நகர அவை தலைவர் கருணாநிதி, நகர பொருளாளர் சென்னீரப்பா, நகர துணைச்செயலாளர்கள் திம்மராஜ், நாகராஜ், சாந்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் நகர செயலாளர்கள் அக்ரோ நாகராஜ்,

நடேசன், மகளிரனி முனிரத்னா, சுனந்தம்மா மற்றும் பொறியாளர் அனி ஞானசேகரன், ஐடி விங் ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமு, வேணு உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். மாவட்ட அவை தலைவர் யுவராஜ் நன்றி கூறினார். இதை தொடர்ந்து 250 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. இதே போல் ஒசூர் பகுதியில் 6 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூளகிரி: சூளகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், பிரகாஷ், முருகன், சத்யா கலந்து கொண்டனர். மேலும், சூளகிரி பகுதி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், பாக்கியராஜ், அப்பையா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்