சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
12/3/2020 3:55:13 AM
சேலம், டிச.3:தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய் மாமனும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளருமான ராஜாவின் தந்தையுமான கருப்ப கவுண்டர் (98), கடந்த இருதினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அந்தியூர் செல்வதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார். தொடர்ந்து, காரில் அந்தியூருக்கு சென்ற அவர், உயிரிழந்த கருப்ப கவுண்டரின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கருப்ப கவுண்டரின் மகன் ராஜா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, சேலம் வந்த முதல்வர், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். இன்று(3ம் தேதி) காலை அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து, சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். முன்னதாக, சேலம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, இன்று மாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், கொடுமுடி, கரூர் மார்க்கமாக மதுரைக்கு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஓமலூரில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த பெண்ணின் கண்கள் தானம்
பக்தர்கள் பால்குட ஊர்வலம்
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து •தடுத்த மாமியாரையும் குத்தினார் •தொழிலாளியை பிடித்து விசாரணை
மக்காச்சோள கதிர்கள் தீயில் எரிந்து சாம்பல்
மாற்றுத்திறன், 80 வயதை கடந்த 87,770 பேருக்கு தபால் ஓட்டு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!